மஞ்சள் தூள் பாவனையால் ஆபத்து : மக்களுக்கு மீண்டும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

697

மஞ்சள் தூள்..

இலங்கையில் சமகாலத்தில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூள் மனித பாவனைக்கு பொருத்தமானது அல்லவென நுகர்வோர் விவகார அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர். மேலும், மஞ்சள் தூள் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சபை எச்சரித்துள்ளது.

அண்மையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் மாதிரிகளை பெற்று சோ தனையொன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, அரிசி மா, கோதுமை மா, பருப்பு, கடலை பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தரமானதாக காணப்பட்ட நிலையில், மஞ்சள் தூள் மாத்திரம் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.

சில இடங்களில் மஞ்சள் தூளில் இரசாயன பொருட்கள் மற்றும் நிறமிகளும் பயன்படுத்தப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்களால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் குறித்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

மஞ்சள் தூள்களில் இவ்வாறு கலப்படம் செய்து விற்பனை செய்து வரும் வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்த்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் மஞ்சள் இறக்குமதி தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக மஞ்சளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மஞ்சள் தூள் தொடர்பில் பல தடவைகள் எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.