இலங்கையில் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு விரைவில் தடை!!

795

பொது இடங்களில்..

பொது இடங்கள் அனைத்திலும் புகைப்பிடிக்கும் பழக்கம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய புகையிலை மற்றும் ம துசார அதிகாரசபையின் தலைவர் சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் சில பகுதிகளில் மாத்திரமே புகைப்பிடிக்கும் பழக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் ஏனைய பிரதேசங்களும் தடை செய்யப்படும் என்று சமாதி ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சட்டத்தினால் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் செயற்பாடு உரிய வகையில் வரையறுக்கப்படவில்லை. எனவே விரைவில் கொண்டு வரப்படும் சட்டத்தின்மூலம் அனைத்து பொது இடங்களிலும் புகைப்பிடிப்பது தடைசெய்யப்படும் என்று சமாதி ராஜபக்ச தெரிவித்தார்.