யுவதிக்கு ஏற்பட்ட நிலை..

திருகோணமலை – சம்பூரில் 17 வ யதான பெ ண்ணொருவரை து ஷ்பி ரயோக த்திற் குட்படு த்திய இ ரண்டு பி ள்ளைகளின் த ந்தையை வி ளக்கம றியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 3ம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார். சீதனவெளி, சேனையூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனது வீட்டுக்கு அயல் வீட்டில் வசித்து வந்த 17 வயதுடைய பெண்ணொருவரை காதலித்து வந்த நிலையிலே பெற்றோர்களுக்கு தெரியாமல் சம்பூர் சூரநகர் பகுதியில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் சந்தேக நபரின் மனைவி சம்பூர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சதேக நபரை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 17 வயதுடைய பெண் மருத்துவ ப ரிசோ தனைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.





