4 இலட்சம் பேரின்..

கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமையால் நாட்டில் 4 இலட்சம் பேர் தமது தொழிலை இழந்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொரளைப் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் கொரோனா வைரஸ் நெருக்கடியால் வேலையிழந்த நான்கு இலட்சம் பேருக்கும் புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருப்போம்.

எவ்வாறாயினும் தற்போதைய அரசு தொழில் இழந்தவர்களுக்காக புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரையாற்றினார்கள்.





