வவுனியாவில் களவாடப்பட்ட மாடுகள் : இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த நிலையில் கண்டுபிடிப்பு!!

842

மாடுகள்..

வவுனியா நெளுக்குளம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கா ணாமல் போன மாடுகள் மாடு அறுக்கும் தொழுவத்தில் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த நிலையில் நேற்று (24.08.2020) மாலை கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெளுக்குளம் பகுதியில் மாடு கா ணாமல் போன நிலையில் மாட்டின் உரிமையாளர் தேடி வந்துள்ளார்.

இந் நிலையில் அவரின் மாடு வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட சோயா வீதியில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மாட்டின் உரிமையாளர் அங்கு சென்று இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த மாடுகளை பார்வையிட்டுள்ளார்.

இதன் போது அங்கு கா ணாமல் போன மாடு காணப்பட்டுள்ளது. அதனையடுத்து மாட்டின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து வி சாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த மாட்டினை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

கா ணாமல் போன மாட்டினை இறைச்சிக்காக மாடு அறுக்கும் தொழுவத்திற்கு வழங்கிய குற்றச்சாட்டில் பட்டக்காடு 6ம் ஒழுங்கையினை சேர்ந்த 29வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மாடுகள் களவாடப்படுகின்றமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் 100க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.