கோர விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாப மரணம்!!

754

கோர விபத்தில்..

வெல்லவாய – தணமல்வில வீதியில், நெலுவயாய சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உ யிரிழந்துள்ளனர். நேற்றிரவு வெல்லவாய – தணமல்வில வீதியில், கித்துல்கோட்டே, நெலுவயாய சந்திக்கு அருகே இடம்பெற்ற விபத்திலேயே குறித்த இரு இளைஞர்களும் உ யிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இரு இளைஞர்களும் எதிரே வந்த கப் வாகனத்துடன் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த செவணகல, கலுதியகமவைச் சேர்ந்த,

19 வயதான, ஜி.ஜி. இந்திக சாமல் சத்துரங்க மற்றும் மோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்து வந்த 17 வயதான கசுன் ஶ்ரீமால் மூணசிங்க ஆகியோரே ம ரணமடைந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியமை மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் கப் வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரை வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், மேலதிக வி சாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தணமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.