ஒற்றை ஆளாக தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த மகன் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

556

நெஞ்சை உருக்கும் சம்பவம்..

தெலுங்கானாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்ட மகன் ஒற்றை ஆளாக தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இ றந்து போனார்.

குறித்த பெண்ணின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். எனவே அப்பெண்ணும் கொரோனாவால் இ றந்திருக்கலாம் என கருதிய குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை அடக்கம் செய்ய முன்வரவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகனே தாயின் சடலத்தை JCBயில் வைத்து எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகவே,

பலரும் தங்களது க ண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். உடனடியாக நிஜாமாபாத் கலெக்டர் பிறப்பித்த உத்தரவில், ஒருவரது இறுதிச்சடங்கு முறையாக நடைபெற வேண்டும்.

அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உ யிரிழந்தால் மாவட்ட சுகாதாரத்துறையினர், குடும்ப உறவினர்கள் அல்லது வருவாய் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட வேண்டும்.

அவர்களுக்கு தேவையான PPE உடைகளை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.