நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் சாதித்த வடக்கின் சாதனை வீராங்கனை சரணியா!!

589

சரணியா..

அண்மையில் நடைபெற்ற 31வது தேசிய இளைஞர் கழக விளையாட்டுப்போட்டியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சரணியா 1500 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

முல்லைத்தீவு – யோகபுரம் மகாவித்தியாலயத்தில் உயர்தர வணிகத்துறையில் கல்வி கற்று வரும் இம்மாணவி ஆரம்பகாலத்தில் குறுந்தூர ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டு தனது திறனை வளர்த்துள்ளார்.

பின்னர் சரியான பயிற்சி மூலம் அவர் நெடுந்தூர ஓட்டபந்தயங்களில் கலந்துகொண்டு வெற்றிகள் பலவற்றை பெற்று வருகின்றார்.