லண்டனில் இருந்து விமானத்தில் வந்த பின் ஹொட்டலில் தங்க வைக்கப்பட்ட தமிழ்ப்பெண் த ற் கொ லை!!

307

லண்டனில் இருந்து….

லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த பெண் ஹொட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வி பரீத முடிவெடுத்து உ யிரை மா ய்த்துக் கொ ண்டது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா காரணமாக த வித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை கடந்த மே மாதம் முதல் இயக்கி வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து வரக்கூடியவர்கள் அரசு அமைத்த கல்லூரிகளில் இலவசமாகவும் ஹொட்டல்களில் கட்டணம் செலுத்தியும் 14 நாள் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கடந்த 24ந் திகதி லண்டனில் இருந்து வந்த பயணிகள் சென்னை பரங்கிமலையில் உள்ள தனியார் ஹொட்டலில் தனிமைப்படுத்த தங்க வைக்கப்பட்டனர்.

அதன்படி கோவையை சேர்ந்த மனோன்மணி (47) என்பவரும் தங்கி இருந்தார். இவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. மேலும் ஒரு வார காலம் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.

லண்டனில் உள்ள மகளிடம் பேசிக்கொண்டு இருந்த மனோன்மணி கொரோனா தொற்று இல்லாமல் இங்கு இருப்பது ப யமாக இருக்கிறது என்று புலம்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லண்டனில் உள்ள மகள் செல்போனில் மனோன்மணிக்கு அழைத்து உள்ளார். நீண்ட நேரமாக எடுக்காததால் நண்பர்களிடம் சென்று பார்க்குமாறு தகவல் கூறினார்.

அவர்கள் ஹொட்டல் அறைக்கு சென்று மனோன்மணி தூ க் கி ட் டு உ யிரை மா ய்த்ததை கண்டு அ திர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த பரங்கிமலை பொலிசார் ச டலத்தை கைப்ப ற்றி இது குறித்து விசாரித்து வருகின்றனர்.