வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!!

523

தழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பின்னடைவு குறித்து ஆராய மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தவைரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று காலை 10.30 தொடக்கம் 5.30 வரை தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கட்சியின் மத்திய செயற்குழுவினர் கலந்து கொண்டனர். இதன் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

நடைபெற்0று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஆராய்ந்தோம். ஒவ்வொரு பிரதேசங்களிலும் இருந்து வந்தவர்கள் தமது பகுதிகளில் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கான காரணங்களை எடுத்து கூறினார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விரைவில் ஒரு குழு நியமிக்கப்படும். அத்துடன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கு கிடைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பிலும் மத்திய செயற்குழு ஒரு தீர்மானம் எடுத்தது.

தேசியப் பட்டியல் ஆசனம் தலைவரது அனுமதி பெறாது செயலாளர் பெயரை தெரிவு செய்து தேர்தல் திணைக்களத்திற்கு அறிவித்தது தவறு எனவும், அம்பாறை மாவட்டத்தின் கலையரசன் அவர்களுக்கு அந்த ஆசனத்தை வழங்கியது சரி எனவும், அதை அவர் தொடர வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தேவைப்பட்டால் அடுத்த செயற்குழுவில் செயலாளரது நடவடிக்கை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுப்போம். அதுவரை அவர் தொடர்ந்தும் பதவியில் இருப்பார்.

தேர்தல் காலத்தில் கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக இணையத்தளங்கள், ஊடகங்களில் கருத்துக்கள், செய்திகள் வெளிவந்தமை தொடர்பிலும், வேட்பாளர்கள், உறுப்பினர்கள் குறித்து பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் கருத்து வெளியிட்ட கட்சி உறுப்பினர்களுக்குனு ஒழுக்காற்று நடவடிககை எடுக்கப்படும்.

அது தொடர்பில் விசாரணை செய்ய சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாகவும், 2020 ஆம் ஆண்டு எமது தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் அரசியல் தீர்வு, கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், மக்களது பிரச்சனைகள் தொடர்பில் விரைவில் மத்திய செயற்குழு கூடி ஆராய்வோம். தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் பொதுக் குழுவை கூட்டுதல் தொடர்பில் அடுத்த செயற்குழுவில் முடிவு எட்டப்படும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர், கொறடா தொடர்பில் இங்கு எவரும் கேள்வி எழுப்பவில்லை. அதை நாங்கள் பாராளுமன்ற குழுவிற்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம். தேவைப்பட்டடால் இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசுவோம் எனத் தெரிவித்தார்.