வவுனியாவில் பெற்றோரை இழந்து 18 வருடங்களாக அன்பகத்தில் வசிக்கும் இரு யுவதிகளுக்கு திருமணம்!!

1111

அன்பகத்தில்..

தாய், தந்தையினை இழந்த நிலையில் 18 வருடத்திற்கு மேலாக வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் வசித்து வந்த இரு யுவதிகளுக்கு அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மா தலைமையில் இன்று (30.08.2020) காலை திருமணம் இடம்பெற்றது.

பகீர்தா என்ற யுவதி 18 வருடங்களாகவும் துர்க்கா என்ற யுவதி 19 வருடங்களாகவும் வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தின் வசித்து வந்துள்ளனர். இவர்கள் திருமண வயதினை அடைந்தமையினால் அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மாவின் ஏற்பாட்டில் திருமணம் இடம்பெற்றது.

குறித்த திருமண நிகழ்வு வேப்பங்குளம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிகள் இந்து அன்பக மண்டபத்தில் நடைபெற்றிருந்ததுடன் ஜெயரூபன் , கார்த்திக் ஆகிய இரு இளைஞர்களே அன்பத்தில் வசித்த யுவதிகளை திருமணம் முடித்தவர்களாவார்கள்.

பகீர்தா என்ற யுவதிக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களும் அவரது துணைவியாரும் தாய் தந்தையாகவும்,

துர்க்கா என்ற யுவதிக்கு வவுனியா நகரசபை செயலாளர் இராசையா தயாபரன் அவர்களும் அவரது துணைவியாரும் தாய் தந்தையாக பொறுப்பேற்று திருமணத்தினை நடத்தி வைத்தனர்.

இந் திருமண நிகழ்வில் இரு மணமகன் வீட்டாரின் உறவினர்களும், வவுனியா மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் , பொதுமக்கள் , அன்பகத்தில் உள்ள சிறார்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ் திருமண நிகழ்வினை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் சிறப்பாக முறையில் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.