மஞ்சள் தூள் விவகாரம் :பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

408

மஞ்சள் தூள்..

மஞ்சள் தூள் தொடர்பில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் சு ற்றிவளை ப்புக்களை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

தற்போதைய நிலையில் மஞ்சள் விற்பனை தொடர்பான கு ற்றங்கள் காரணமாக 113 வர்த்தகர்களுக்கு எ திராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் மஞ்சளுக்காக 750 ரூபாய் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த விலையை விட அதிக விலைக்கு மஞ்சளை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எ திராக இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அத்துடன், காலாவதியான மஞ்சளை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மஞ்சளுடன் பல்வேறு பொருட்கள் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில், பிரதேசங்கள் சிலவற்றில் 42 மஞ்சள் தூள் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. குறித்த மஞ்சள் தூள் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 23 மாதிரிகளின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த மாதிரிகளில் 13 வகை மஞ்சள் தூள்களில் சில பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு பூராகவும் உள்ள மாவட்ட பிரதிநிதிகளுக்கு இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.