வவுனியாமாவட்ட பொது வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!

536

பணிப்புறக்கணிப்பு..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்களினால் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதுடன் கவனயீர்ப்பு போ ராட்டத்திலும் ஈடுபட்டனர்.

குறித்த கவனயீர்ப்பு போ ராட்டம் வைத்தியசாலையின் வெளிநோயோளர் பிரிவுக்கு முன்பாக இன்று (02.09.2020) காலை 9 மணி தொடக்கம் 11மணிவரை முன்னெடுக்கப்பட்டடிருந்தது.

வரவு மற்றும் வெளியேறல் தொடர்பாக நேரத்தினை விரல் அடையாள இயந்திரத்தில் பதிவு செய்யும் நடமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இச் செயற்பாடு தமது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளமையினால் அதனை தவிர்த்து பழைய முறைப்படி கையொப்பம் இடுவதற்காக செயற்பாட்டினை முன்னெடுக்குமாறு தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கவனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிற்றூழியர்கள் எங்களை சுய மரியாதையுடனும் சுய கௌரவத்துடனும் பணி செய்ய விடு, கைவிரல் அடையாள பதிவேடு கேட்டு எங்களை அசிங்கப்படுத்தாதே,

கடமை ஒழுங்கை சீர்குலைக்காதே மன அமையுடன் பணி செய்ய விடு, வடமாகாண சபையே இது நியாயமா?, எமக்கு மட்டும் ஏன் இந்த அநீதி போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

சிற்றூழியர்களின் இப் பணிப்புறக்கணிப்பு போ ராட்டம் காரணமாக வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தந்த பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.