அம்பாறை கடற்பிராந்தியத்தில் தீப்பற்றி எரியும் கப்பல்!!

943


கப்பல்..



அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



எம்.ரி நியு டைமன் என்ற குறித்த எண்ணெய் கப்பலில் உள்ள ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.




கப்பலின் எஞ்ஜின் அறையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து இதுவரையில் பிரதான எரிபொருள் தாங்கி வரையில் பரவவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கப்பலில் 23 பேர் கொண்ட குழுவினர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மீட்பு பணிகளுக்காக இரண்டு கடற்படை கப்பல்கள் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந் நிலையில்,வான் படைக்கு சொந்தமான பீ.டுவென்டி கண்காணிப்பு படகு குறித்த கடற்பிராந்தியத்திற்கு அனுப்பபட்டு குறித்த கப்பல் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் கடற்படை அதிகாரி ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் 2 லட்சத்து 70 ஆயிரம் மெற்றிக் டன் மசகு எண்ணெய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக சிறிய ரக விமானம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.