வவுனியாவில் வீதியோர மரங்கள் முறிந்து விழும் அபாயம்!!

743

வீதியோர மரங்கள்..

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையினால் வீதியோரத்திலுள்ள பழமைவாய்ந்த மரங்கள் முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குருமன்காடு – புகையிரத நிலைய வீதியில் வீதியோரங்களில் காணப்படும் பழமைவாய்ந்த சில மரங்கள் பட்டுள்ளதுடன் சரிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன.

வவுனியாவில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் அம்மரங்கள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த வீதியூடாக ஆபத்துடன் தினசரி ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பயணித்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தினை செலுத்தி அவ் மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் மரம் முறிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உ யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.