வவுனியா நெளுக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்!!

377


இரத்ததான முகாம்..


இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் குருதிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக இரத்ததான முகாம் இடம்பெற்றது.


நெளுக்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் நேற்று (05.09.2020) காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 12.00 மணிவரை குறித்த இரத்தான முகாம் நடைபெற்றிருந்தது.


இரத்ததான முகாம் நெளுக்குளம் இளைஞர்கள் மற்றும் பொது அமைப்பான அன்பாலயா அமைப்பின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘உதிரம் கொடுப்போம் உ யிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான முகாமில் 30க்கு மேற்பட்ட இளைஞர்கள் , மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.