வவுனியாவில் நெளுக்குளத்திலிருந்து இராசேந்திரகுளம் வரை மரங்கள் நாட்டி வைப்பு!!

493


மரங்கள்..


வவுனியா நெளுக்குளம் தொடக்கம் இராசேந்திரகுளம் வரையிலான பகுதியில் மரங்கள் நாட்டி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நெளுக்குளம் சந்தியில் நேற்று (05.09.2020) காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.உலக வெப்பமாதலை தடுப்பதுடன் சுற்றாடல் சமநிலையை பேணுதல், பறவைகளுக்கான வாழ்விடங்களை உருவாக்குதல் எனும் நோக்கோடு இம் மரநடுகை திட்டமானது நெளுக்குளம் இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இதன் போது வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளார் து.நடராஜசிங்கம் , கிராம சேவையாளர் சாந்தரூபன், வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர், இளைஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.