10 ஆண்டுகளில் 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் : விசாரணையில் அ திர்ச்சி!!

636

10 ஆண்டுகளில்…

இந்தியாவில் பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்தவர் கிஷோர். 66 வயதாகும் இவர் கட்டுமான ஒப்பந்தக்காரராக இருக்கிறார்.

இவரின் கடந்த ஆண்டு உ யிரிழந்த நிலையில், தனிமையில் வாடி வந்துள்ளார். அப்போது டெல்லியை சேர்ந்த மேட்ரிமோனியல் ஏஜென்சி ஒன்று செய்தித்தாளில் அளித்த ஒரு விளம்பரத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் விவாகரத்து செய்யப்பட்ட நபர்களுக்கு உரிய துணையை தேடித் தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்ததை இவர் கவனித்துள்ளார்.

அதன் பின் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, அதன் உரிமையாளர் மஞ்சு கன்னா அவருக்கு ஏற்ற மணமகள் என்று கூறி மோனிகா மாலிக் என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதையடுத்து சில வாரங்கள் சந்தித்து பேசிய பிறகு இருவரும் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் திருமணம் செய்து கொண்டனர். கிஷோரின் வீட்டில் மோனிகா மாலிக் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், திருமணம் முடிந்த 2 மாதங்கள் கூட முடியாத நிலையில், மோனிகா மாலிக் வீட்டில் இருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்துடன் வீட்டைவிட்டு ஓடியுள்ளார்.

இதை அறிந்து அதிர்ச்சியடைந்த கிஷோர் உடனடியாக அந்த மேட்ரிமோனியல் ஏஜென்சியை தொடர்பு கொண்டபோது, ஏஜென்சியை சேர்ந்தவர்களும் அவரை மிரட்டியதோடு, கிஷோர் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துவிடுவோம் என அச்சுறுத்தியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து கிஷோருக்கு மோனிகாவின் முந்தைய கணவரைப் பற்றிய தகவல் கிடைக்க, அவரைத் தொடர்புகொண்டபோது அவரும் இதேபோல் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

பின்னர் கிஷோர் பொலிசார் மோனிகா மீது புகார் அளிக்க, விசாரணையில் ​​மோனிகா கடந்த 10 ஆண்டுகளில் 8 முதியவர்களை இதேபோல ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் IPC பிரிவு 419 (ஆள்மாறாட்டம் மூலம் மோ சடி), 420 (மோ சடி), 380 (தி ருட்டு), 384 (மி ரட்டி பணம் ப றித்தல்), 388 (அ ச்சுறுத்தலால் மி ரட்டி பணம் ப றித்தல்) மற்றும் 120 பி (கி ரிமினல் சதி) ஆகியவற்றின் கீழ் மோனிகா, அவருடைய குடும்பத்தினர் மற்றும் திருமண நிறுவனம் மீது வழக்குபதிவு செய்து பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.