தமிழ் சிறுமியின் படிப்பு நான்கு ஆண்டுகளாக உதவி வரும் பிரதமர் மோடி : பலருக்கும் தெரியாத தகவல்!!

614


தமிழ் சிறுமி..



தமிழகத்தில் ஏழை சிறுமி ஒருவரின் படிப்பிற்காக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னுடைய சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் பவித்ரமாணிக்கம் கிராமத்தில் உள்ள திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு ரஷிதா என்ற மகள் உள்ளார்.



ரஷிதா கடந்த 2016-ஆம் ஆண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்க ஆசைப்பட்டு விண்ணப்பித்தார். ஆனால், பள்ளி நிர்வாகம் ரக்ஷிதாவின் விண்ணப்பத்தை ஏற்கவில்லை.




இதனால் உடனடியாக ரஷிதாவும், குணசேகரனும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உதவி கேட்டு கடிதம் அனுப்பினர். இந்த கடிதத்தைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக மாணவிக்குப் பள்ளியில் இடம் ஒதுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.


பிரதமரின் உத்தரவால் ரக்ஷிதாவை சேர்த்துக்கொண்டது பள்ளி நிர்வாகம். ஆனால், பள்ளிக் கட்டணத்தைக் கட்டாத சிறுமியைப் பள்ளிக்கு வெளியே நிற்க வைத்தது நிர்வாகம்.

உடனே குணசேகரன் மீண்டும் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அதிலிருந்து மாணவி ரக்ஷிதாவின் கல்விக் கட்டணத்தை பிரதமர் மோடியே ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் செலுத்தி வருகிறார்.


பிரதமரின் உதவியால் நான்கு வருடங்களாகப் படித்துவரும் சிறுமி ரக்ஷிதா, தான் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றியைத் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். தன்னைப் போன்ற ஏழை, எளிய மாணவர்களும் படிக்கப் பிரதமர் உதவி புரியவேண்டும் என்று கூறியுள்ளார்.