ஹொட்டலில் மயக்கத்தில் இருந்து கண்விழித்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி : வாழ்க்கையை புரட்டிப்போட்ட சம்பவம்!!

1227

மயக்கத்தில் இருந்து..

லண்டனில் பெண் ஒருவரை 62 வினாடிகள் கொண்ட வீடியோ எடுத்து அவர் வாழ்க்கையே பாழாகி போகும் நிலைக்கு தள்ளிய நபர் சட்டத்துக்கு முன்னர் கொண்டு வரப்பட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு Emily Hunt (41) என்ற பெண் கிழக்கு லண்டனில் உள்ள சொகுசு ஹொட்டலுக்கு தனது தந்தையுடன் சென்றார். பின்னர் இரவு 10 மணியளவில் ஹொட்டல் அறையில் Emily Hunt மயக்கத்தில் கிடந்துள்ளார். கண்விழித்த போது தான் எப்படி அங்கு வந்தேன் என்றே அவருக்கு தெரியாமல் இருந்துள்ளது.

இதையடுத்தே Christopher Killick (40) என்பவர் அந்த அறையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். Christopher, Emily-ஐ மோசமான நிலையில் வீடியோ எடுத்தது தெரியவந்தது, இது தொடர்பாக Christopher கைது செய்யப்பட்டார்.

தனக்கு நேர்ந்த விடயம் குறித்து Emily கூறுகையில், இந்த சம்பவம் எனக்கு ஆழ்ந்த குழப்பமான நிலையை கொடுத்ததோடு மனதை பலவீனப்படுத்தியது.

இதன்பிறகு த ற் கொ லை எண்ணம் கூட தோன்றியது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் வாழ்க்கையை பாழக்கி புரட்டி போட்டுவிட்டது. என் வேலையை இழந்து கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டேன் என கூறினார்.

சம்பவத்தின் போது போ தையில் இருந்த Emily-ஐ Christopher நைசாக அறைக்கு அழைத்து வந்தது சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது, மேலும் அப்பெண்ணுக்கு அந்த நபர் போ தை மருந்துகளையும் கொடுத்திருக்கிறார்.

Christopher மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு £5,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதோடு £2,000 அபராதம், £85 நீதிமன்ற செலவுகளை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் 30 மாத சமூக உத்தரவின் கீழ் மறுவாழ்வு அமர்வுகளில் Christopher கலந்து கொள்ள வேண்டும் எனவும், குற்றவாளிகள் பதிவேட்டில் 5 ஆண்டுகளுக்கு கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.