வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய வாயிலில் காத்திருக்கும் ஆபத்து!!

1525

ஆலய வாயிலில்..

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்திற்கு தினசரி நூற்றுக்கு மேற்பட்ட பக்த அடியார்கள் சென்று வருகின்றனர்.

ஆலயத்தின் நூழைவாயிலில் அண்மைக்காலமாக ஆபத்தான தேனி வகையை சேர்ந்த பாரிய குளவிகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் ஆலயத்திற்கு செல்லும் பக்த அடியவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வவுனியா நீர்த்தாங்கி மற்றும் அரச ஊழியர் விடுதியிலும் பாரிய குளவிக்கூடுகள் காணப்படுகின்ற நிலையில் இவை பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனவே ஆபத்து ஏற்படுவதற்கு முன்னர் இதனை அழிப்பதற்கு ஏதுவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றன.