இலங்கையில் க ண்டுபிடிக்க ப்பட்ட பெருந்தொகை தங்கம் : இத்தனை கோடி ரூபா பெறுமதியா?

2370


த ங்கம்..



புத்தளம், கற்பிட்டியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி 9 கோடியே 53 லட்சத்து 636 ரூபாய் என இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.



இந்த தங்கம் பாலவிய பிரதேசத்தில் இருந்து கற்பிட்டி வரை மோட்டார் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.




குறித்த தங்கம் 9 கிலோ 592 கிராம் நிறையுடையதெனவும், அவை அனைத்தும் 22 கரட்டிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தங்கம் மிகவும் சூட்சுமமான முறையில் க டத்தப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.