காய்கறிகள் மற்றும் மீன்களின் விலை சடுதியாக உயர்வு!!

1001

காய்கறிகள் மற்றும் மீன்..

நாட்டில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல வகையான காய்கறிகள் மற்றும் மீன்களின் மொத்த மற்றும் சில்லறை விலை கணிசமாக அதிகரித்துள்ளது உற்பத்தி பகுதிகளிலிருந்து வழங்கல் குறைவாக உள்ளமையே இதற்கான காரணம் என்று பொருளாதார மத்திய மையங்கள் தெரிவித்துள்ளன.

பாதகமான வானிலை காரணமாக ஏற்படும் இடையூறுகள் மரக்கறிகள் மற்றும் மீன்களின் மொத்த மற்றும் சில்லறை விலையில் உயர்வை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

போஞ்சி, கரட், தக்காளி, சிவப்பு வெங்காயம், பெரிய வெங்காயம், உலர்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் மொத்த மற்றும் சில்லறை விலை அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் மீன்களின் மொத்த மற்றும் சில்லறை விலையும் அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தம்புள்ளை மற்றும் புறக்கோட்டை பொருளாதார மையங்களில் காய்கறி விலை அதிகரித்துள்ளது அதே நேரத்தில் நாரஹன்பிட்டி பொருளாதார மையத்தில் மரக்கறி விலை சற்று குறைந்துள்ளது.

ஒரு கிலோ கரட், 270 ரூபா, போஞ்சி, 170 ரூபா, தக்காளி 140 ரூபா, பெரிய வெங்காயம் 180 ரூபா உலர்ந்த மிளகாய் 450 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டன 1 கிலோ மீன் 220 முதல் 950 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது

“கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது பேலியகொட மற்றும் நாரஹன்பிட்டி சந்தைகளில் பெரும்பாலான மீன் வகைகளின் விலை அதிகரித்துள்ளது,

சில மீன் வகைகள் நீர்கொழும்பு சந்தையில் கிடைக்கவில்லை, சாதகமற்ற வானிலையால், மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதே இதற்கான காரணம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.