வவுனியாவில் யு த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய தொழில் கடன்!!

743


சுய தொழில் கடன்..


வவுனியா மாவட்டத்தில் யு த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பொதுமக்களுக்குமான சுயதொழில் ஊக்குவிப்பு கடன் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு வவுனியா மாவட்டச்செயலகத்தில் இன்று (11.09.2020) இழப்பீடுகள் வழங்கும் அலுவலகத்தினால் நடாத்தப்பட்டது.இன்நேர்முகத்தேர்வானது அரச வங்கியின் ஊடாக வழங்கப்படும் சுயதொழில் இழப்பீடு அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் திஸநாயக்க, மாவட்டஉதவி பிரதேச செயலாளர், வங்கி முகாமையாளர்களால் நடாத்தப்பட்டது.


இந் நேர்முகத் தேர்வில் வவுனியாமாவட்டத்தில் இருந்து சுயதொழில்கடனுதவிக்கு விண்ணப்பித்திருந்த 230 பேர் பங்குபற்றினர்.


யு த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாகவும் பொதுமக்களின் சுயதொழில் செயல்பாட்டை அதிகரிப்பதற்காகவும்,

குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவிகளை வழங்குவதற்கான செயற்திட்டத்தினை சுயதொழில் இழப்பீடு அலுவலகத்தினால் செயற்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.