வவுனியாவில் பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபர் படுகாயம்!!

461

vavu acc

வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர் செலுத்திய மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் படுகாயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புளியங்குளத்தில் பனங்கிழங்குகளை விற்பனை செய்து விட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது புளியங்குளம் முத்துமாரிநகர் பகுதியில் அதே பக்கமாக பொலிஸார் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ் விபத்தில் மதியாமடு கிராமத்தை சேர்ந்த ம.சின்னத்துரை (65) என்பவரே காயமடைந்துள்ளார். இதேவேளை படுகாயமடைந்தவரை அப் பகுதியில் இருந்தவர்கள் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.