வவுனியா நகரசபை ஊழியர்களிற்கிடையில் முரண்பாடு : இருவர் கைது!!

583


இருவர் கைது..


வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்களிற்கிடையில் நேற்று ஏற்பட்ட மு ரண்பாட்டின் காரணமாக வவுனியா பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா நகரசபையில் சுகாதார தொழிலாளர்களின் இரு தொழிற்சங்கங்கள் செயற்பட்டுவரும் நிலையில் இருதரப்பையும் சேர்ந்த சில ஊழியர்களிற்கிடையில் நேற்று முரண்பாடு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நகரசபை ஊழியர்கள் இரண்டு பேர் ச ந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.