வவுனியா செட்டிக்குளத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி!!

467


புளியாலங்குளம் பகுதியில்..


வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியாலங்குளம் பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையால் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், செட்டிக்குளம் நேரியகுளம் பகுதியினை சேர்ந்த இளைஞர் புளியாலங்குளம் பகுதியில் காணி துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மரத்தின் உச்சியில் இருந்த குளவிக்கூடு கலைந்து குறித்த இளைஞரை கொட்டியுள்ளது.


செட்டிக்குளம் நேரியகுளம் பகுதியினை சேர்ந்த 25 வயதுடைய வினோ என்ற இளைஞர் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.