வவுனியாவில் சடலத்தை இனங்கான பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!!

1405


வவுனியா பொது வைத்தியசாலையின்..


வவுனியா பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் ச டலத்தை இனங்கான பொதுமக்கள் உதவியை பறயனாலங்குளம் பொலிஸார் கோரியுள்ளனர்.கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பறயனாலங்குளம் பகுதியிலுள்ள தற்காலிக கடை ஒன்றிலிருந்து ச டலம் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். எனினும் அவர் குறித்த மேலதிக தகவல்கள் அடையாள அட்டைகள் என்பன அவரிடம் காணப்படவில்லை.


இவரது அடையாளம் இன்று வரையிலும் காணமுடியவில்லை. இறந்தவர் கறுப்பு நிற நீளக்காட்சட்டையும் வெளிர் நிறமுடைய சேட்டும் தலைமுடி குறைந்து பக்கவாட்டில் சீவியிருந்தார்.


தடித்த மீசையுடன் காணப்படும் குறித்த நபரை இனங்கான பொதுமக்கள் 0243242448, 0718592115 ஆகிய இலக்கத்திற்கு பறயனாளங்குளம் பொலிஸாருக்கு தகவல் தருமாறு தற்போது உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.