வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்தின் அவலநிலை!!

2096


மணிக்கூட்டுக் கோபுரம்…



வவுனியா மணிக்கூட்டு கோபுரம் ஆசியாவின் அதிசயமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.



வவுனியா நகர மத்தியில் காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரமானது தவறான நேரத்தை காட்டுவதனால் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பிரயாணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளகின்றனர்.




குறிப்பாக காலை இலங்கை நேரப்படி 09.20 நிமிடமாக காணப்படும் போது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தின் நேரமானது இரு பக்கங்களில் 11.12 மற்றும் 12.10 நிமிடமாக ஆக காணப்படுகின்றது. மேலும் இரு பக்கங்களில் உள்ள மணிக்கூடுகள் இயங்கவில்லை.


நகரத்துக்கு மத்தியில் அதாவது பொதுச்சந்தை, வங்கிகள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றிக்கு செல்லும் வீதியில் காணப்படுகின்ற இம்மணிக்கூட்டு கோபுரமே பிழையான நேரத்தை காட்டுவதாகும்.

பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வரும் நகர சபையினர் ஏன் இவ்விடயத்தில் அக்கறையின்றி செயற்படுகின்றனர் எனவும் இது ஆசியாவின் அதிசயம் என்று கூட கேலி செய்யும் வகையில நகரசபை அசமந்தபோக்காகவுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.