வவுனியாவில் மௌன அலைகள் நூல் வெளியீட்டு விழா!!

520


நூல் வெளியீட்டு விழா..


வவுனியாவில் மௌன அலைகள் நூல் வெளியீட்டு விழா இன்று (20.09.2020) மதியம் 3 மணியளவில் இடம்பெற்றது.நோர்வே விஜேந்திரன் எழுத்தாக்கத்தில் உருவான இந்நூல் வெளியீடு விழா ஜனனம் நம்பிக்கை மையத்தின் ஏற்பாட்டில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க காலாசார மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.


புளியங்குளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் சு.ஜெயசந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல் பிரதியை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன் வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.


இந்நிகழ்வில் தமிழரவி சிவகுமாரன், வைத்தியர் மதிதரன், வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரவீந்திரன், கலைஞர்கள், சமூக மட்ட பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.