உக்ரைனில் தொடரும் பயங்கர கலவரம் : 1000 பேரை காணவில்லை!!(படங்கள்)

529

உக்ரைனில் நடைபெற்ற கலவரத்தில் இதுவரையிலும் 25 பேர் வரை பலியாகி உள்ளனர். உக்ரைனில் அரசு படையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

நேற்று நடைபெற்ற கலவரத்தில் 7 பொலிசார் உட்பட 25 பேர் பலியாகி உள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த கலவரத்தில் 1000க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என கூறப்படுகிறது, அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் கலவரம் நடக்கும் இடத்தை விட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைன் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் பதவி விலகக்கோரி, கடந்த நவம்பர் மாதம் முதல் எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

U1 U2 U3 U4