84 வயது மூதாட்டியின் வயிற்றில் குழந்தை!!

459


Stone Babyபிரேசிலை சேர்ந்த 84 வயது மூதாட்டி, 44 ஆண்டுகளாக சிசுவை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார்.

பிரேசிலை சேர்ந்த 84 வயது மூதாட்டி ஒருவருக்கு, பல ஆண்டுகளாக கடுமையான வயிற்றுவலி இருந்து வந்துள்ளது.
இதற்காக பல்வேறு சிகிச்சைகளும் எடுத்துக் கொண்டுள்ளார், 40 வயதில் இருந்தே இந்த வலியானது இருந்து வந்துள்ளது.



இந்நிலையில் சமீபத்தில் ஸ்கேன் எடுத்து பார்த்த போது தான், கருப்பைக்கு வெளியே சிசு உருவாகி உயிரற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இதுபோன்று சில பெண்களுக்கு கருப்பைக்கு வெளியே சிசு உருவாகும்.

இந்த மூதாட்டின் வயிற்றுக்குள் இருக்கும் சிசு சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அது இறந்துவிட்டதால் சுற்றிலும் கல்சியம் படிந்துள்ளது, இதனை ஸ்டோன் பேபி என்று அழைப்பர் என்று தெரிவித்துள்ளனர்.



மேலும் இந்த சிசுவுக்கு 20–28 வாரம் இருக்கலாம் என்றும், கை, கால், முதுகெலும்பு, விலா எலும்பு ஆகியவை உருவாகி இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர். எனினும் சிசுவை அகற்ற மூதாட்டி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.