வவுனியாவில் பழைய மரங்களை அகற்றும் செயற்பாடு முன்னெடுப்பு!!

725


பழைய மரங்களை..



வவுனியாவில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையினால் வீதியோரத்திலுள்ள பழைய மரங்கள் முறிந்து விழும் அபாயம் ஏற்படுவதாக அண்மையில் எமது ஊடகத்தில் செய்தி வெளியாகியிருந்த நிலையில் அம் மரங்ளை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுகின்றன.



குருமன்காடு – புகையிரத நிலைய வீதி , ஏ9 வீதி ஆகிய வீதியோரங்களில் காணப்படும் பழைய மரங்கள் சரிந்து விழும் நிலையில் இருந்தன.




அவற்றை அகற்றும் செயற்பாட்டில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் ஈடுபட்டிருந்தனர். குறித்த செயற்பாட்டினை இலங்கை மின்சார சபையின் பாரஉயர்த்தி வாகனத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தன.


சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் வீதியோர மரம் முறிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உ யிரிழந்து ள்ளமை குறிப்பிடத்தக்கது.