தேசிய பாரம்பரிய தளமாக மாறும் ஒன்பது வானங்களின் பாலம்!!

654

பதுளை – தெமோதர ரயில் பாதையில் காணப்படும் ஒன்பது வளைவுகளை கொண்ட பாலத்தின் 100வது ஆண்டை குறிக்கும் வகையில், தேசிய பாரம்பரிய தளமாக வர்த்தமானி செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதற்காக நினைவு முத்திரை உருவாக்கப்படும் என்றும் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள், கிராமிய கலை மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண சபை ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மிலின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொண்ட அமைச்சர், பாலத்தை பாதுகாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பாலத்தை தேசிய பாரம்பரிய தளமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை, கண்டியன் ரயில்வே கட்டுமானத்துடன் 1921ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பாலம் 300 அடி நீளமும், 25 அடி அகலமும், 80 அடி உயரமும் கொண்டதாகும்.

ஒன்பது வளைவு கொண்ட இந்த பாலம் கல், செங்கல் மற்றும் சிமென்ட் ஆகியவற்றால் ஆனது. இந்த பாலம் “ஒன்பது வானங்களின் பாலம்” என்றும் அழைக்கப்படுகிறது.