தனுஸ்கோடி கடல் பிராந்தியத்தில் கரை ஒதுங்கிய இராட்சத ரப்பர் உருளை!!

835

இராட்சத ரப்பர் உருளை..

தனுஸ்கோடி அருகே அரிச்சல் முனை கடல் பகுதியில் இன்றைய தினம் கரை ஒதுங்கிய இரப்பர் உருளை குறித்து தமிழக கடலோர காவல் குழும பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ராமநாதபுரம் – தனுஸ்கோடி அருகே மீன் பிடிக்கச் சென்ற நாட்டு படகு மீனவர்கள் அரிச்சல் முனை அருகே இராட்சத ரப்பர் உருளை கரை ஒதுங்கியுள்ளதாக தனுஸ்கோடி தமிழக கடலோர காவல் குழும பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சுமார் 15 உயரமும் 6 அடி விட்டமும் கொன்ட இரப்பர் உருளை சுமார் 3 டன் எடை கொண்டதாக இருக்கும் என ராமேஸ்வரம் கடலோர காவல் குழும ஆய்வாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கரை ஒதுங்கிய பைபர் உருளை ஆழ்கடலில் செல்லும் கப்பல்களில் மிதவையாகவோ அல்லது துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடையாமல் தடுக்கும் உருளையாகவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும், இந்த வகையாக ரப்பர் உருளை தூத்துக்குடி துறைமுகத்தில் பயன்பாட்டில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுகத்திற்கு வந்த கப்பல்களில் இருந்து தவறி விழுந்து தனுஸ்கோடி கடற்பகுதிக்குள் வந்திருக்கலாம் என்ற கோணத்திலும் மெரைன் பொலிஸாருடன் பாதுகாப்பு வட்டாரங்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.