வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தின விழா!!

1160


சர்வதேச சிறுவர்தின விழா..


சர்வதேச சிறுவர் தினம் நாடாளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்திலும் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.குறித்த நிகழ்வு அன்பக மண்டபத்தில் இன்று (01.10.2020) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றிருந்தது.


நிகழ்வின் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், வவுனியா உதவி பிரதேச செயலாளர் பிரியதர்சினி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா அந்தணர் ஒன்றியத்தின் உபதலைவர் பிரபாகரக் குருக்கள்,


பௌத்த மதகுரு குருந்துகொட பஞ்ச ஞானசாரதேரர், அருட்தந்தை வின்சன், நன்னடத்தை உத்தியோகத்தர் துஸ்யந்தன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கெனடி,

சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் நந்தசீலன், கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் குகனேஸ்வர சர்மா மற்றும் விருந்தினர்களாக சட்டத்தரணிகள், அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள்,

பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிறுவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இங்கு சிறுவர்களின் நடனம் , கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.