கண்டியில் 5 மாடிக் கட்டடம் மண்ணில் புதையுண்டது எப்படி? காரணம் வெளியானது!!

655

கண்டியில்..

கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் அண்மையில் 5 மாடி கட்டடம் உடைந்து விழுந்து மண்ணில் புதையுண்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த கட்டடத்தின் நிர்மாணிப்பு நடவடிக்கை உரிய தரத்திற்கமைய மேற்கொள்ளாமையே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

அதற்கமைய குறித்த கட்டடம் மண் சரிவினால் உடைந்து விழவில்லை என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மேற்கொண்ட வி சாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிறுவகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டடம் ஒரு போதும் உரிய நிலையில் காணப்படவில்லை என அந்த அறிக்கை மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் உடைந்து விழுந்தமையினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உ யிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.