100 க்கும் மேற்பட்ட பெண்கள ஒரே பாணியில் குற்றவாளியின் அ திர்ச்சி வாக்குமூலம்!!

763

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவனுக்கு தெரியாமல் புது புடவை எடுக்கும் பெண்கள், சற்று வசதி படைத்த பெண்களை குறி வைத்து, வாட்ஸ் அப் மூலம் புடவை விற்பனை என மோ சடியில் ஈடுபட்டு பல ஆயிரம் ரூபாய் வரை சுருட்டிக் கொண்டு த லைம றைவான நபரை பொலிசார் கைது செய்தனர்.

சென்னை ஓட்டேரி ஏகாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்திரா பிரகாஷ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியந்தோப்பு சரக துணை ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார்.

அதில், வாட்ஸ்ஆப் எண்ணிலிருந்து அறிமுகமான ஒருவர் அவரை தொடர்புகொண்டு குறைந்த விலையில் புடவை உள்ளிட்ட துணிகள் விற்பனை செய்வதாக கூறியதாகவும்,

அதன் பின் ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்த்து புது, புது டிசைன்களிலான புடவை உள்ளிட்ட பெண்கள் அணியும் ஆடைகளின் புகைப்படங்களை அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அக்கம்பக்கம் உள்ள பெண்களிடமும் அந்த வாட்ஸ்ஆப் குழு குறித்து தெரிவித்து அவர்களையும் அந்த குழுவில் இந்திரா பிரகாஷ் சேர்த்துவிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா காலம் என்பதால் நேரில் வரமுடியாது, உங்களுக்கு தேவையான ஆடைகளின் புகைப்படங்களை தெரிவு செய்து, பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தினால் கூரியர் மூலம் துணிகள் வீட்டுக்கு அனுப்பப்படும் என அந்த நபர் கூறியுள்ளார்.

இதை அடுத்து அவர் சொன்ன வங்கிக் கணக்கில் இந்திரா மற்றும் அவரது தோழிகள் பணத்தை அனுப்பியுள்ளனர்.பணம் செலுத்திய சிறிது நேரத்தில், அந்த வாட்ஸ்ஆப் குழுவை கலைத்த அந்த நபர், தனது போனையும் சுவிட்ச்ஆப் செய்துவிட்டு த லைம றைவாகிவிட்டார்.

இதையடுத்து, இந்திரா கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் மோ சடியில் ஈடுபட்டவரை கண்டுபிடிக்க சைபர் கிரைம் பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டது.

அவர்கள் அந்த நபர் பயன்படுத்திய செல்போன் எண் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை ஆய்வு செய்தபோது, அவர் தாம்பரம் கல்யாண்நகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதான ராஜேந்திரன் என்பது தெரிந்தது.

அதன் பின் அவரை பி டி த் து விசாரித்த போது, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலம் நடுத்தர வயதுடைய, கொஞ்சம் வசதி படைத்த பெண்களின் தொடர்பு எண்களை பெற்று,

அதன் பின் அவர்களை ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்த்து, அவர்களுக்கு பிடித்த உடைகள், காஸ்மெட்டிக் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதாக கூறி ஆசை வரவைப்பது.

அதன் பின், குழுவில் சுமார் 20 பேர் சேர்ந்த உடன், அவர்களிடம் பொருட்களை தேர்வு செய்யச் சொல்லி, பணத்தை வங்கிக் கணக்கிற்கு செலுத்துச் சொல்லுவார்.

பணம் வந்த உடன் வாட்ஸ்ஆப் குரூப்பை கலைத்துவிட்டு, போன் எண்ணையும் மாற்றிவிட்டு வேறு எண்ணில், வேறு ஒரு வாட்ஸ்ஆப் குழுவை உருவாக்கி மோ சடியை அரங்கேற்ற சென்றுவிடுவேன்.

சில நூறுகளில் தொடங்கி சில ஆயிரங்கள் வரை மட்டுமே ஏமாறுவதாலும், கணவருக்கு தெரியாமல் பெரும்பாலான பெண்கள் ஆர்டர் செய்வதாலும் புகார் கொடுக்க மாட்டார்கள்.

சென்னையில் மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உள்ளதாகவும், ஒருவரும் இதுவரை புகார் அளித்ததில்லை என்று அ திர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.