அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் 101 வயது முதியவர்!!

302

100 Yearsஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள ஜோ நியுமனின் வயது 101 என்பது வியப்பைத் தரும் ஒரு விஷயமாகும்.

ஆனால் சரசோட்டாவிலிருந்து வந்து சரசோட்டா மற்றும் மனாடி பகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிட உள்ள இந்த இளைஞரோ தனது அனுபவங்களினால் தனக்கு இந்தப் பொறுப்பு வந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

தனக்குப் 16 வயதாகும்போது நாட்டில் ஏற்பட்ட பெரும் சரிவுநிலை உட்பட பல சவால்களை தான் எதிர்நோக்கியுள்ளதாக அவர் கூறுகின்றார். இந்த வயதில் தேர்தலில் போட்டியிடும் என்னை மக்கள் கேலி செய்தாலும் நம்முடைய சமூகப் பொறுப்புகளை உணர்ந்து அனைவரையும் திருப்திப் படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று நியுமன் குறிப்பிடுகின்றார்.

நியுமனுடைய தாயார் அவர்களுடைய இந்தியானா வீட்டில் மளிகைக்கடை நடத்தி வந்தார் என்றும் பணம் பெறும் விஷயங்களுக்கு அடமானமாக உணவுப் பொருட்களை அவர் அளித்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளைய வயதில் கல்லூரிப் படிப்பை முடித்தபின்னர் சமூகப் பாதுகாப்பு என்ற கூட்டாட்சித் திட்டம் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சார வேலையில் நியுமன் ஈடுபட்டிருந்தார்.

சமுதாயம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான இந்தத் திட்டத்தை விற்பது தங்களின் வேலையாக இருந்தது என்று அவர் குறிப்பிடுகின்றார். இப்போதோ அரசாங்கம் சிறப்பு நலன்களில் கவனம் செலுத்துவதை விடுத்து சமுதாயத்தை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்ற புதிய செய்தியுடன் தேர்தலில் போட்டியிட இருப்பதாக நியுமன் தெரிவிக்கின்றார்.