இளைஞனுக்கு எமனாக மாறிய ஃபேஸ்புக்!!

585

Sun

சூரியன் மறைவதை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்ய முயன்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார். இந்த சோக சம்பவம் அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் நடந்துள்ளது.

David Strohm Jr என்ற 28 வயது கலிபோர்னிய இளைஞர் மாலை 6 மணியளவில் சூரியன் மறைவதை புகைப்படம் எடுத்து தனது ஃபேஸ்புக்கில் போட நினைத்தார். எனவே அவரது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் ஏறி நின்று சூரியன் மறைவதை புகைப்படம் எடுக்க முயற்சி செய்தபோது, மரத்தின் அருகில் இருந்த எலக்ட்ரிக் வயர் மீது சாய்ந்து, மின்சார ஷாக்கில் பலியானார்.

அவரது உடல் மரத்தின் மேலேயே விழுந்து கிடந்துள்ளது. David Strohm Jr வீட்டில் உள்ளவர்கள், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

அதன்பிறகுதான் அவர் மரத்தின் மீது பிணமாக இருப்பது தெரியவந்தது. உடனடியாக மீட்புப்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த பகுதியின் மின் இணைப்புகளை துண்டித்துவிட்டு, David Strohm Jr பிணத்தை மீட்புப்படையினர் கீழே இறக்கினர்.

இந்தசம்பவம் குறித்து கலிபோர்னியா பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த David Strohm Jr உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.