வவுனியாவில் சிறுதோட்ட செய்கையாளரால் முன்னெடுக்கப்படும் மஞ்சள் செய்கை!!

1669

மஞ்சள் செய்கை..

மஞ்சள் செய்கை மேற்கொண்டால் அதிக வருமானத்தை பெற முடியும் என்பதனால் வவுனியா சிறு தோட்ட செய்கையாளர்கள் மஞ்சள் செய்கையில் கவனம் செலுத்தி அதனை பயிரிட்டு வருகின்றனர்.


அரசாங்கம் மஞ்சள் இறக்குமதியை நிறுத்தியுள்ளதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் மஞ்சள் செய்கையில் ஆர்வம் செலுத்தியிருக்கின்றனர்.

கொவிட் – 19 தாக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறு தோட்டச் செய்கையாளர்கள் தற்போது மஞ்சள் செய்கையில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் தவசியாகுளம் மற்றும் சிறிராமபுரம் ஆகிய பகுதிகளில் சிறுதோட்ட சைய்கையாளர்கள் மஞ்சள் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மஞ்சள் பயிரை பிரதான பயிராகவும் ஊடுபயிராகவும் பயிரிட்டுள்ளார்கள். கொவிட் – 19 தாக்கம் காரணமாக நாட்டில் மஞ்சளின் தேவை அதிகரித்துள்ளது.

மஞ்சள் ஒரு வெப்ப மண்டலப்பயிர் ஆகும். ஆனாலும் கேள்வி அதிகரித்து சந்தை வாய்ப்பு வசதி இருப்பதனால் அவ்வப்போது ஏற்பட்ட காலநிலை மாற்றத்திலும் மஞ்சளை பயிரிட்டு உத்தரவாத விலையில் விற்பனை செய்து இலாபமீட்டியுள்ளனர்.

ஒரு கிலோ மஞ்சள் ஆயிரம் ரூபாய்க்கு தற்போது மொத்த வியாபாரிகளினால் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அதன் மூலேமே இலாபத்தைப் பெற முடிந்துள்ளது எனவும் மஞ்சள் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாய பொருளாதார நடவடிக்கைக்கு முன்னுரிமையளிக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மஞ்சள் செய்கையாளர்களுக்கான மானிய திட்டங்களைப் பெற்றுத் தருவதுடன்,

மஞ்சளை பதப்படுத்துவதற்க்குரிய இயந்திரங்களை பெறுவதற்க்கும் செய்கையாளருக்கான பயிற்சிகளையும் பெற்றுக் தரவேண்டும். இதன் மூலம் தற்சார்ப்பு பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என்பதே மஞ்சள் செய்கையாளரின் எதிர்பாகவுள்ளது.