19 வயது மகளை மீட்டு தரக்கோரி கோவில் குருக்கள் மனு : 38 வயது எம்.எல்.ஏ-வை மணந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு!!

1001

பிரபு – சௌந்தர்யா..

38 வயதான அதிமுக எம்.எல்.ஏ பிரபு 19 வயது கல்லூரி மாணவியை மணந்து கொண்ட விவகாரத்தில் புதுப்பெண்ணும் அவரின் தந்தையும் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவும், தியாகதுருகம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சௌந்தர்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பெண் வீட்டில் திருமணத்துக்கு சம்மதிக்காததால் தனது குடும்பத்தினர் முன்னிலையில் எம்.எல்.ஏ பிரபு காதலியை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் தனது மகளை எம்.எல்.ஏ பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்து க ட த் தி ச் சென்று திருமணம் செய்து விட்டதாகவும், தனது மகளை மீட்டு தரக் கோரியும், சௌந்தர்யாவின் தந்தையான கோவில் குருக்கள் சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

படிக்கும் பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி எம்.எல்.ஏ. பிரபு க ட த் தி சென்றுவிட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே தம்மை யாரும் க ட த் த வி ல் லை என்று மணப்பெண் செளந்தர்யா நேற்று முன்தினம் வீடியோ வெளியிட்டார்.

மேலும் செளந்தர்யாவை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யவில்லை என எம்எல்ஏ பிரவும் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் சாமிநாதன் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வி சாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மனைவியை நாளை மதியம் நேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர் அத்துடன் சுவாமிநாதனும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.