தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த நாய்!!

326

Dog

அமெரிக்க மேயர் தேர்தலில் போட்டியில் நாய் ஒன்று மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் இர்விங் நகர மேயர் தேர்தல் மே 5ம் திகதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வெஸ்டி என்ற இனத்தை சேர்ந்த நாய் சார்பில், அதன் உரிமையாளர் மைக் ஹோவர்ட் கடந்த 18ம் திகதி மனுதாக்கல் செய்துள்ளார்.

அத்துடன் பிரசாரத்தில் ஈடுபட தொடங்கினார், அந்த நாயின் பெயர் டைலான். வேட்பு மனுவில், பெண் நாய் வெஸ்டியின் மகன் டைலான் என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை பார்த்த தேர்தல் அதிகாரி அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.

மனுவில் டெக்னிக்கல் குளறுபடி இருப்பதாகவும், மேயர் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை என்று கூறியும் பரிசீலனைக்கு ஏற்பதற்கு முன்பே அதிகாரி தள்ளுபடி செய்துவிட்டார்.

இதுகுறித்து மைக் ஹோவர்ட் கூறுகையில், இர்விங் நகரில் சில பிரச்னைகள் இருப்பதாகவும், அது பற்றி டைலானுக்கு சில கருத்துகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 1984ம் ஆண்டு முதல் மைக் ஹோவர்ட் அரசியலை கிண்டல் செய்து நிறைய கட்டுரைகள் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.