இலங்கையில் உருவாகியுள்ள மாறுபட்ட கொரோனா கொத்தணி!!

844

கொரோனா..

இலங்கையில் இதுவரையில் பரவிய கொரோனா வைரஸ் வகைகளை அடையாளம் காண மரபணு நிரலாக்க ஆராய்ச்சி ஒன்றை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ளது.

டெங்கு பரிசோதனை நிலையத்தில் குறித்த பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த போது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அந்த பரிசோதனைக்கு அமைய இலங்கையில் ஒரே வகையே சேர்ந்த கொரோனா வைரஸ் வகையே காணப்பட்டதாக அடையாளம் காணப்பட்டது.

அது அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வகைக்கு சமமானதாகும். வைரஸ் உருவாகிய சீனாவின் வுஹான் நகரத்தில் பரவிய கொரோனா பீ வகையை சேர்ந்ததாகும்.

மினுவாங்கொட பிரென்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியதாக உறுதியாகியதனை தொடர்ந்து இலங்கையினுள் புதிய கொரோனா கொத்தணி ஒன்று உருவாகியுள்ளது.

அதற்கமைய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட குழுவினால் மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைக்கமைய, தற்போதைய தொற்றாளர்களின் உடலில் உள்ள கொரோனா வகையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதென சந்தேகம் ஏற்பட்டுள்ளது.