வவுனியா வைரவபுளியங்குளம் குளக்கட்டை பாதுகாக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் : மக்கள் வேண்டுகோள்!!

609

வவுனியா வைரவபுளியங்குளம் குளக்கட்டு (குள அரண்) வீதியால் கனரக மற்றும் பார ஊர்திகள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வவுனியா நகரசபையால் இத்தடை உத்தரவு பல மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பல வாகனங்கள் இத் தடையையும் மீறி இக் குளக்கட்டில் பயணிப்பதாகவும் இதனால் குளக்கட்டு மற்றும் வீதி பலத்த சேதம் அடைவதாகவும் விசனம் தெரிவித்த மக்கள். இக் குளக்கட்டை பாதுகாக்காக வவுனியா நகரசபையும் பொலிசாரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

1 2