இலங்கையில் எகிறும் சமூகத் தொற்று : மூன்றாம் அலைக்கு 1188 பேர் இலக்கு!!

628

சமூகத் தொற்று..

கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடைக்கு வெளியே தொடர்ந்தும் கொரோனாத் தொற்றாளர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழல் உருவாகி வருகின்றது.

நேற்று மட்டும் 105 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவின் மூன்றாம் அலையில் சிக்கிய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,188 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரை நாட்டில் பதிவான மொத்தக் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 4 ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் தொகையும் 3 ஆயிரத்து 306 ஆக உயர்ந்துள்ளது.

1,307 கொரோனாத் தொற்றாளர்கள் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : வெளியாகியுள்ள அறிவிப்பு!!

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் தொடர்பில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களும் அவர்களுடன் நெருங்கிய 101 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் தொடர்பிலான கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 1186ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 4628 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1309ஆக அதிகரித்துள்ளது.