வவுனியாவில் 1591 சாரதிகளுக்கு எதிராக போக்குவரத்துப் பொலிசார் நடவடிக்கை!!

2039

போக்குவரத்துப் பொலிசார்..

வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களுக்கு கடந்த செப்டெம்பர் மாதம்,

1591 வாகனச்சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல், தண்டப்பணம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கும்போது,

வவுனியா போக்குவரத்து பொலிசாரினால் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கடந்த செப்டெம்பர் மாத காலப்பகுதியில் ம து போ தை யி ல் வாகனம் செலுத்திய 83 சாரதிகள், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய 8 பேர் உட்பட 91 சாரதிகளுக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாகன காப்புறுதிப்பத்திரம் , போக்குவரத்து அனுமதிப்பத்திரம் , தவறான முறையில் வாகனம் செலுத்தியமை, வாகனம் செலுத்தும்போது தொலைபேசிப் பாவனை, வாகன இருக்கைப்பட்டி அணியாமை போன்ற 1500 சாரதிகளிடம் சிறு குற்றங்களுக்கு எதிராக தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த ஒரு மாத காலப் பகுதியில் போக்குவரத்துப் பொலிசார் போக்குவரத்து விதிமுறை சட்டங்களை மீறிய 1591 வாகனச் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு வரும் காலங்களிலும் போக்குவரத்து பொலிசாரின் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார்.