வவுனியாவில் பாதுகாப்பற்ற முறையில் நடமாடும் யாசகர்கள் : அச்சத்தில் வர்த்தகர்கள்!!

912


வவுனியா நகர் பகுதியில் யாசகர்கள் பலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பாதுகாப்பற்ற முறையில் நடமாடுவதால் கொவிட் -19 தொற்று ஏற்படும் என்ற அ ச்சத்தில் வர்த்தகர்கள் உள்ளனர்.



வவுனியா நகரையண்டிய பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்த யாசகர்கள், வர்த்தகர்கள் மற்றும் நகரப்பகுதிக்கு செல்வோரிடம் யாசகம் கேட்கின்றனர்.

அத்துடன் வவுனியா நகரம் மற்றும் வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் முன்னால் இரவு வேளைகளில் உறங்குகின்றனர்.



சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பாதுகாப்பற்ற முறையில் யாசகர்கள் நடமாடுவதாலும், வர்த்தக நிலையங்களின் முன்னால் உறங்குவதாலும் கொவிட் – 19 தொற்று ஏற்பட்டுவிடும் என அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பில் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வவுனியா பொலிசார் ஆகியோருக்கு தெரியப்படுத்தியும் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும்,


யாசகர்கள் கடைகளின் முன்னால் தங்குவதால், தாம் தினமும் கடைகளின் முன்னால் கிருமி நீக்கம் செய்ய வேண்டியுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.