வவுனியாவில் உழுந்தினை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்வோம் : இ.விஜயகுமார்!!

1555

உழுந்திற்கான உத்தரவாத விலை குறைவடைந்தால் கமநல அபிவிருத்தித் திணைக்களம் அதனை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யும் என்று வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் அதிகளவான உழுந்து உற்பத்தியில் ஈடுபடுவது வவுனியா மாவட்டமே.

தற்போது ஒரு கிலோ உழுந்தின் விலை 800 ரூபாய்க்கு மேல் உள்ளமை நாம் அறிந்ததே. எனினும் அறுவடையின் போதும் உத்தரவாத விலையேனும் விவசாயிகளிற்கு கிடைப்பதில்லை.

கடந்த காலத்தில் ஆகக்கூடுதலாக ஒரு கிலோ 140 ரூபாவிற்கே விற்க முடிந்தது. இம்முறை 2020/2021 பெரும்போகத்தின் போது அரசின் உத்தரவாத விலையான கிலோ ஒன்றிற்கு 220/= ரூபாயினை விட குறையுமாயின்,

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களம் அதனை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யும் எனவே பயமின்றி இம்முறை உழுந்து உற்பத்தியினை மேற்கொள்ளுங்கள்.

கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையிடம் இருந்து உழுந்து செய்கைக்கான காப்புறுதியை செய்து கொள்ள முடியும்.

இது தொடர்பான தகவல்களுக்கு உதவி பணிப்பாளர்-கதிர்காமநாதன்- 0779779038 அவர்களது குறித்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

ஒரு ஏக்கருக்கு 50,000/= வரையான காப்புறுதி தொகைக்காக 2,250/= இனை கட்டண தொகையாக செலுத்தி கட்டாயமாக பயிர் காப்புறுதியினை மேற்கொள்ளுங்கள்.

விதை உழுந்தினை வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் விதைகள் மற்றும் நடுகை பொருட்கள் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம். என்றார்.