வவுனியா நகரசபைக்கு முன்பாக ஒன்ற கூடிய 30க்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் : நடந்தது என்ன?

1890

முச்சக்கரவண்டிகள்..

வவுனியா நகரசபை தமக்கு அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து 30க்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் வவுனியா நகரசபை முன்பாக ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

வவுனியா நகரசபைக்கு முன்பாக இன்று (13.10.2020) மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரின் அபிவிருத்தியினை கருத்தில் கொண்டும் ஏனைய சில மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள வாடகைக்கார் பயன்பாட்டினையடுத்து வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியில் வாடகைக்கார் செலுத்துவதற்கு நபர் ஒருவருக்கு வவுனியா நகரசபையினரினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் வாடகைக்காருக்கான அனுமதியினை இரத்து செய்யக்கோரி வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் வவுனியா நகரசபைக்கு முன்பாக 30க்கு மேற்பட்ட்ட முச்சக்கரவண்டிகளில் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டிருந்தது.

அதன் பின்னர் வவுனியா நகரசபை தவிசாளர் காரியாலயத்தில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினருக்கும் வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் மற்றும் நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

வாடகைக்காருக்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தினை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் எதிர்வரும் நகரசபை கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுப்பதாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் மற்றும் நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்தமையினையடுத்து அவர்கள் அவ்விடத்தினை விட்டு கலைந்து சென்றனர்.